இந்திய விமானப்படை தாம்பரம் விமானதளத்தின் புதிய தலைவராக ஏர் கமடோர் தபன் ஷர்மா பதவியேற்பு!

1 week ago 3

சென்னை: இந்திய விமானப்படை தாம்பரம் விமானதளத்தின் புதிய தலைவராக ஏர் கமடோர் தபன் ஷர்மா பதவியேற்றார். ஏற்கனவே இப்பொறுப்பில் இருந்த நிலைய கமாண்டிங் அதிகாரி ஏர் கமடோர் ரதீஷ்குமாரிடமிருந்து அவர் இப்பொறுப்பை ஏற்றுக் கொண்டார். இதையொட்டி அவருக்கு அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. ஏர் கமடோர் தபன் ஷர்மா, இந்திய விமானப்படைக்கு சொந்தமான பல்வேறு வகை விமானங்களை 2500 மணி நேரத்திற்கும் மேலாக இயக்கி சிறந்த அனுபவம் பெற்றவராவார்.

The post இந்திய விமானப்படை தாம்பரம் விமானதளத்தின் புதிய தலைவராக ஏர் கமடோர் தபன் ஷர்மா பதவியேற்பு! appeared first on Dinakaran.

Read Entire Article