இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் சயின்டிஸ்ட், இன்ஜினியர்

1 day ago 3

பணியிடங்கள் விவரம்:

1. சயின்டிஸ்ட்/ இன்ஜினியர் (எஸ்சி) (எலக்ட்ரானிக்ஸ்): 22 இடங்கள். சம்பளம்: ரூ.56,100. வயது: 28க்குள். தகுதி: எலக்ட்ரானிக்ஸ்/எலக்ட்ரானிக்்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் பாடப்பிரிவில் குறைந்தது 65% மதிப்பெண்களுடன் பி.இ.,/பி.டெக்., பட்டம் பெற்றிருக்க வேண்டும். கேட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
2. சயின்டிஸ்ட்/இன்ஜினியர் (எஸ்சி) (மெக்கானிக்கல்): 33 இடங்கள். சம்பளம்: ரூ.56,100. வயது: 28க்குள். தகுதி: மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பாடத்தில் குறைந்தது 65% மதிப்பெண்களுடன் பி.இ.,/பி.டெக்., பட்டம் பெற்றிருக்க வேண்டும். கேட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
3. சயின்டிஸ்ட்/இன்ஜினியர் (எஸ்சி) (கம்ப்யூட்டர் சயின்ஸ்): 8 இடங்கள். சம்பளம்: ரூ.56,100. வயது: 28க்குள். தகுதி: கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங் பாடத்தில் குறைந்தது 65% மதிப்பெண்களுடன் பி.இ.,/பி.டெக்., பட்டம் பெற்றிருக்க வேண்டும். கேட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
கேட் 2024/2025 தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். நேர்முகத் தேர்வில் விண்ணப்பதாரரின் தொழில்நுட்ப அறிவு, பொது அறிவு, தகவல் தொடர்பு அறிவு ஆகியவற்றை பரிசோதிக்கும் வகையில் கேள்விகள் கேட்கப்படும். நேர்முகத் தேர்வு பற்றி முழு விவரம் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும். நேர்முகத் தேர்வின் போது அசல் சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும்.விண்ணப்பதாரர்கள் கேட் 2024-2025 தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டிய பாடங்களின் கோட் விவரம் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. எழுத்துத் தேர்வு அல்லது நேர்முகத் தேர்வுக்கான அழைப்பு கடிதத்தை இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

கட்டணம்: ரூ.250/-. பாரத்கோஷ் பேமென்ட் (Bhatarkosh Payment) முறையின் கீழ் ஆன்லைனில் செலுத்த வேண்டும். பெண்கள்/எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகள்/முன்னாள் ராணுவத்தினருக்கு கட்டணம் கிடையாது.www.isro.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 19.05.2025.

 

The post இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் சயின்டிஸ்ட், இன்ஜினியர் appeared first on Dinakaran.

Read Entire Article