டாக்கா: இந்திய வானிலை ஆய்வு துறையின் 150வது ஆண்டு விழா வருகிற 15ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், மியான்மர், பூடான், நேபாளம், இலங்கை மற்றும் மாலத்தீவுகள் உள்ளிட்ட அண்டை நாடுகள், மத்திய கிழக்கு மற்றும் தென் கிழக்கு ஆசியாவை சேர்ந்த நாடுகளுக்கு இந்திய வானிலை ஆய்வுத்துறை அழைப்பு விடுத்துள்ளது.
இது தொடர்பாக வங்கதேச வானிலை ஆய்வுத்துறையின் பொறுப்பு இயக்குனர் மொமினுல் இஸ்லாம் கூறுகையில்,‘‘ஒரு மாதத்திற்கு முன்பே இந்திய வானிலை ஆய்வுத்துறை அதன் 150வது ஆண்டு விழாவில் கலந்து கொள்வதற்காக எங்களுக்கு அழைப்பு விடுத்தது. எனினும் அரசு செலவில் அத்தியாவசியமற்ற வெளிநாட்டு பயணங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. எனவே நாங்கள் விழாவில் கலந்துகொள்ளவில்லை” என்றார். இந்திய வானிலை ஆய்வுத்துறையின் அதிகாரி கூறுகையில், விழாவில் கலந்து கொள்வதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
The post இந்திய வானிலை ஆய்வு துறையின் 150வது ஆண்டு விழா இந்தியா வருகிறது பாகிஸ்தான் புறக்கணித்தது வங்கதேசம் appeared first on Dinakaran.