சிங்கப்பூர்: சிங்கப்பூரில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ஈஸ்வரன் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார். இந்நிலையில் அவர் ஊழலில் ஈடுபட்டதாகவும், தொழிலதிபர்களிடம் இருந்து பரிசு பொருட்கள் பெற்றதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்தது. இதனை தொடர்ந்து அவர் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இதுதொடர்பான சிங்கப்பூர் உயர்நீதிமன்றத்தில் நீதிபதி வின்சென்ட் ஹூங் விசாரித்தார். இந்நிலையில் தொழிலதிபர்களிடம் இருந்து 4,03,300 சிங்கப்பூர் டாலர் மதிப்புள்ள பரிசு பொருட்கள் பெற்ற வழக்கில் அவருக்கு 12 மாத சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
The post இந்திய வம்சாவளியை சேர்ந்த சிங்கப்பூர் முன்னாள் அமைச்சருக்கு 12 மாத சிறை appeared first on Dinakaran.