காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டுள்ள அறிக்கை:
இந்திய ராணுவத்தில் 2025-26ம் ஆண்டுக்கான அக்னிவீர் (ஆண்-பெண்) மண்டல, மத்திய பிரிவுகளுக்கான ஆட்சேர்ப்பு முகாம் நடக்கிறது. தமிழ்நாட்டில் கடலூர், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, சென்னை, திருவள்ளூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் புதுச்சேரி, அந்தமான், நிக்கோபார் தீவுகளை சேர்ந்தவர்களும் விண்ணப்பிக்கலாம். பொதுப்பணி, தொழில்நுட்பம், எழுத்தர், கடைக்காப்பாளர், தொழில்நுட்பம், வர்த்தகர், தொழில் நுட்ப நர்சிங் உதவியாளர், பார்மா ஆகிய பிரிவுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தேர்வர்கள் தகுதி அடிப்படையில் 2 பிரிவுகளுக்கு விண்ணப்பிக்கலாம். பொது நுழைவுத்தேர்வு தமிழ் உட்பட 13 மொழிகளில் நடத்தப்படும். ஐடிஐ, டிப்ளமோ மற்றும் என்சிசி தகுதிபெற்ற விண்ணப்பதாரர்களுக்கு போனஸ் மதிப்பெண் வழங்கப்படும். விண்ணப்பதாரர்கள் www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கவேண்டும். இதற்கான பதிவு காலம் வரும் 25ம்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் எழுத்து தேர்வுக்கான அனுமதி அட்டைகள் ஜூன் முதல் ஆன்லைனில் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு சென்னை போர்ட் செயிண்ட் ஜார்ஜ் வளாகத்தில் உள்ள ஆட்சேர்ப்பு அலுவலகம் (தலைமையகம்) மற்றும் தொலைபேசி எண் 044-25674924 தொடர்புகொள்ளலாம்.
காஞ்சிபுரம் மாவட்ட விண்ணப்பதாரர்களுக்கு, பச்சையப்பன் மேல்நிலைப்பள்ளி, காஞ்சிபுரம் மற்றும் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, ஸ்ரீபெரும்புதூர் ஆகிய இடங்களில் வரும் 19ம்தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சிறப்பு முகாம் நடக்கிறது. வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு கூறியுள்ளார்.
The post இந்திய ராணுவத்துக்கு ஆட்சேர்ப்பு; ஏப்.25 வரை காலஅவகாசம் நீடிப்பு: காஞ்சி கலெக்டர் தகவல் appeared first on Dinakaran.