பணி: Religious Teacher (Junior Commissioned Officer).
கல்வித்தகுதி:
i) பண்டிட்: இந்து மத போதகர் பணிக்கேற்ற வகையில் சம்ஸ்கிருத மொழியில்ஆச்சார்யா பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது கரம் கந்த் சமய பாடப்பிரிவில் ஒரு வருட டிப்ளமோ படிப்பை முடித்து சாஸ்திரி தகுதி பெற்றிருக்க வேண்டும்.
ii) மவுலவி (சன்னி): ஏதாவதொரு இளநிலை பட்டப்படிப்புடன் அலிம் இன் அரபிக்/ மஹிர் இன் உருது ஆகிய பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
iii) பேடர்: ஏதாவதொரு இளநிலை பட்டப்படிப்புடன் கிறிஸ்தவ மத போதகர் பணிக்கு உள்ளூர் பிஷப்பால் அங்கீகரிக்கப்பட்ட தகுதியைப் பெற்றிருக்க வேண்டும்.
iv) புத்ததுறவி (மகாயானம்): ஏதாவதொரு இளநிலை பட்டப்படிப்புடன் புத்த மத ஆசிரியர் பணிக்கான கல்வித்தகுதியை பெற்றிருக்க வேண்டும்.
வயது: 10.04.2025 அன்று 25 முதல் 34க்குள் இருக்க வேண்டும்.
உடற்தகுதிகள்: உயரம்- 160 செ.மீ., உயரம் இருக்க வேண்டும். மார்பளவு- 77 செ.மீ., இருக்க வேண்டும். உடல் எடை- 50 கிலோ இருக்க வேண்டும். உடற்திறன் தகுதி: 8 நிமிடங்களில் 1.6 கி.மீ., தூரத்தை ஓடி கடக்க வேண்டும்.
ராணுவத்தால் நடத்தப்படும் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர்.
அவர்களுக்கு 6 வாரங்கள் அடிப்படை ராணுவ பயிற்சியும், 11 வாரங்கள் மத ஆசிரியர் பயிற்சியும் வழங்கப்படும். பின்னர் ராணுவத்தில் ஜூனியர் கமிஷன்டு ஆபீசர் அந்தஸ்தில் (மத போதகர்) நிரந்தர பணி வழங்கப்படும்.
கட்டணம்: ரூ.250/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.www.joinindianarmy.nic.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 10.04.2025.
The post இந்திய ராணுவத்தில் மத ஆசிரியர் appeared first on Dinakaran.