
சென்னை,
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவராக காதர் மொகிதீன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவருக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவராக தேர்வான காதர் மொகிதீனுக்கு வாழ்த்து தெரிவித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;
"இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவராக மூன்றாவது முறையாக ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மதிப்பிற்குரிய பேராசிரியர் காதர் மொகிதீனுக்கு எனது வாழ்த்துகள்!
பண்பும் அரசியல் முதிர்ச்சியும் மதிக்கூர்மையும் பெற்ற பேராசிரியர் ஐயாவின் தலைமையில், இந்தியாவின் மதச்சார்பின்மையையும் மதநல்லிணக்கத்தையும் வலுப்படுத்தும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் சீரிய மக்கள் பணி சிறக்கட்டும்!"
இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.