வாஷிங்டன் : பாகிஸ்தான் தீவிரவாதிகள் மீதான நடவடிக்கை குறித்து உலக நாடுகளுக்கு இந்திய சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ராணுவ தாக்குதல் குறித்து அமெரிக்க, ரஷ்யா, பிரிட்டன், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளுக்கு இந்திய சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பஹ்லகாமில் கடந்த ஏப்ரல் 22ம் தேதி தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 அப்பாவி பொது மக்கள் பலியாகினர். இந்த நிலையில், பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக, பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள பயங்கரவாத அமைப்புகளின் 9 முகாம்களை குறிவைத்து ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் இந்தியா வான்வழி தாக்குதல் நடத்தியது. இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில் 100 தீவிரவாதிகள் வரை உயிரிழந்திருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.மேலும் காஷ்மீர் மாநிலத்தில் பாகிஸ்தான் அத்துமீறி குண்டு வீசி தாக்குதல் நடத்தியதில் 8 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இந்தியாவின் பதிலடி தாக்குதல் குறித்து வெள்ளை மாளிகையில் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்தியா – பாகிஸ்தான் மோதல் விவகாரம் வருத்தம் அளிப்பதாக கூறியுள்ளார். இரு நாடுகள் இடையிலான போர் பதற்றம் விரைவில் தணியும் என்று நம்புவதாகவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இந்தியா மீது பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதை அடுத்து நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. இந்திய பாகிஸ்தான் நாடுகள் அதிகபட்ச ராணுவ நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அந்தோனியோ குட்டேரஸ் வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக அவரது செய்தி தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், எல்லைக்கட்டுப்பாட்டு கோடு மற்றும் சர்வதேச எல்லையைத் தாண்டி, இந்திய ராணுவ நடவடிக்கைகள் குறித்து அந்தோணியோ குட்டேரஸ் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.மேலும், “இந்தியா – பாகிஸ்தான் நாடுகள் உச்ச பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும். இரு நாடுகள் இடையே போர் பதற்றம் நிலவுவது கவலை அளிக்கிறது,”என்றார்.
The post இந்திய, பாகிஸ்தான் நாடுகள் அதிகபட்ச ராணுவ நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும் : ஐ.நா. வேண்டுகோள் appeared first on Dinakaran.