சென்னை; ஆந்திரா, கேரளா, சட்டீஸ்கர், ஜம்மு-காஷ்மீர், கர்நாடகாவில் அமைக்கப்பட்ட ஐந்து புதிய ஐஐடிகளின் கல்வி மற்றும் உள்கட்டமைப்பு திறனை விரிவுபடுத்துவதற்கு பிரதமர் மோடி தலைமையில் நடந்த ஒன்றிய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது. 2025-26 முதல் 2028-29 வரையிலான நான்கு ஆண்டுகளில் முன்மொழியப்பட்ட விரிவாக்கத்திற்கான மொத்த செலவு ரூ.11,828.79 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ஐஐடிகளில் 130 பேராசிரியர் பதவிகளை உருவாக்கவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த ஐஐடிகள் ஆந்திராவின் திருப்பதி, கேரளாவின் பாலக்காடு, சத்தீஸ்கரில் பிலாய், ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் ஜம்மு, கர்நாடகாவின் தார்வாட் ஆகிய இடங்களில் அமைந்துள்ளன.
ஐடிஐ மேம்பாட்டிற்கான ரூ.60,000 கோடி: இந்தியாவின் தொழிற்கல்வியை மாற்றுவதற்காக ரூ.60,000 கோடி செலவில் ஐந்து தேசிய திறன் மேம்பாட்டு மையங்களை மேம்படுத்துவதற்கு ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் அடுத்த 5 ஆண்டுகளில் 20 லட்சம் இளைஞர்கள் திறன் பெறுவார்கள்.இந்தத் திட்டத்தின் கீழ் புவனேஸ்வர், சென்னை, ஐதராபாத், கான்பூர், லூதியானா ஆகிய ஐந்து என்எஸ்டிஐகளில் உள்கட்டமைப்பு மேம்படுத்தல் மேற்கொள்ளப்படும். கூடுதலாக, 50,000 பயிற்சியாளர்களுக்கு முன் சேவை மற்றும் சேவையில் பயிற்சி வழங்கப்படும்.
The post ரூ.12 ஆயிரம் கோடியில் 5 ஐஐடிகள் விரிவாக்கம்: ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் appeared first on Dinakaran.