மும்பை: வாரத்தின் முதல் நாளிலேயே இந்திய பங்குச்சந்தை ஒரு சதவீதத்துக்கும் அதிகமான சரிவுடன் தொடங்கியுள்ளது. வர்த்தகம் தொடங்கிய உடனேயே சென்செக்ஸ் 842 புள்ளிகள் சரிந்து 75,348 புள்ளிகளுக்கு சென்றது. சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில் 25 நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்து வர்த்தகமாயின. நண்பகல் வர்த்தகத்தின்போது சென்செக்ஸ் சற்று மீண்டு 640 புள்ளிகள் சரிவுடன் 75,550 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்
நிஃப்டி 265 புள்ளிகள் சரிவுடன் தொடங்கி சற்று மீண்டு வர்த்தகம் தொடங்கியது. நண்பகலில் நிஃப்டி 200 புள்ளிகள் சரிவுடன் 22,891 புள்ளிளில் வர்த்தகமாகி வருகிறது. நிஃப்டி பட்டியலில் உள்ள 50 நிறுவனங்களில் 42 நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்து வர்த்தகமாகின்றன.
வர்த்தகம் தொடங்கிய உடனேயே பங்குகள் விலை கடுமையாக சரிந்ததால் முதலீட்டாளர்களுக்கு ரூ.9 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. சென்செக்ஸ் 842 புள்ளிகளும் நிஃப்டி 265 புள்ளிகளும் சரிந்ததால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதேநேரத்தில் நடுத்தர மூலதன நிறுவனங்களின் குறியீட்டு எண் 2.7 சதவீதமும் மூலதன நிறுவன குறியீட்டு எண் 4%-மும் சரிந்துள்ளது. சந்தையில் வர்த்தமாகி வரும் பங்குகளில் 3300 நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்தும் 490 நிறுவன பங்கு விலை உயர்ந்தும் உள்ளது.
The post இந்திய பங்குச்சந்தை சரிவு: முதலீட்டாளர்களுக்கு ரூ.9 லட்சம் கோடி இழப்பு appeared first on Dinakaran.