இந்திய தாக்குதலில் உயிரிழந்தவர்களின் இறுதிச்சடங்கில் பங்கேற்ற பயங்கரவாதி

18 hours ago 3

லாகூர்,

காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம் பஹல்காம் பகுதியில் கடந்த மாதம் 22ம் தேதி பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்ட லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் கிளை அமைப்பான 'தி ரெசிஸ்டண்ட் பிரண்ட்' பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது.

இந்த தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா இன்று அதிரடி தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 9 இடங்களில் நடத்தப்பட்ட தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததாக பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இந்தியா நடத்திய தாக்குதலில் உயிரிழந்தவர்களின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சி லாகூர் அருகே முர்டிக் பகுதியில் நடைபெற்றது. இதில், லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதி ஹபீச் அப்துல் ரால்ப் கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியில் பாகிஸ்தான் ராணுவத்தை சேர்ந்த அதிகாரிகளும் கலந்துகொண்டனர். இது தொடர்பான வீடியோ தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Read Entire Article