இந்திய தர நிர்ணய நிறுவனத்தில் வேலை

6 hours ago 3

பணி: சயின்டிஸ்ட்- ‘பி’. துறை வாரியாக காலியிடங்கள் விவரம்:
1. வேதியியல்: 2 இடங்கள் (பொது-1, ஒபிசி-1)
2. சிவில் இன்ஜினியரிங்: 8 இடங்கள் (பொது-5, எஸ்சி-1, எஸ்டி-1, பொருளாதார பிற்பட்டோர்-1). இவற்றில் ஓரிடம் மாற்றுத் திறனாளிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
3. கம்ப்யூட்டர் இன்ஜினியரிங்: 4 இடங்கள் (பொது-3, எஸ்சி-1)
4. எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங்: 2 இடங்கள் (பொது-1, எஸ்சி-1)
5. எலக்ட்ரானிக் மற்றும் டெலிகம்யூனிகேசன் இன்ஜினியரிங்: 2 இடங்கள் (பொது).
6. என்விரோன்மென்டல் இன்ஜினியரிங்: 2 இடங்கள் (பொது).

தகுதி: 60% மதிப்பெண்களுடன் மேற்குறிப்பிட்ட இன்ஜினியரிங் பாடங்களில் ஏதேனும் ஒன்றில் பி.இ., அல்லது பி.டெக்., ( எஸ்சி, எஸ்டியினருக்கு 50% மதிப்பெண்கள் போதுமானது.) 2023, 2024 மற்றும் 2025 கேட் தேர்வுகளில் ஏதேனும் ஒன்றில் நல்ல மதிப்பெண்கள் எடுத்திருக்க வேண்டும்.வேதியிலுக்கு: வேதியியல் அல்லது நேச்சுரல் சயின்சஸ் அல்லது அதற்கு சமமான பாடத்தில் 60 சதவீத மதிப்பெண்களுக்கு குறையாமல் (எஸ்சி.,. எஸ்டியினருக்கு 50% மதிப்பெண்கள் போதுமானது). 2023,2024, 2025 கேட் தேர்வுகளில் ஏதேனும் ஒன்றில் நல்ல மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.வயது: 23.05. 2025 அன்று 30க்குள். ஒபிசி, எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.www.bis.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 23.05.2025.

The post இந்திய தர நிர்ணய நிறுவனத்தில் வேலை appeared first on Dinakaran.

Read Entire Article