இந்திய டெஸ்ட் அணிக்கு பும்ரா கேப்டனாக இருக்க வேண்டும்: அனில் கும்ப்ளே

3 hours ago 3

புதுடெல்லி,

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து இந்திய அணியின் மூத்த வீரர் ரோகித் சர்மா அறிவித்துள்ளார். ஏற்கனவே சர்வேதேச டி20 போட்டிகளில் இருந்து ஒய்வு பெற்றுள்ள ரோகித் சர்மா ஒருநாள் போட்டிகளில் மட்டும் விளையாட உள்ளதாக அறிவித்துள்ளார்.

இந்த நிலையில், இந்திய டெஸ்ட் அணிக்கு புதிய கேப்டனாக யார் நியமிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்திய டெஸ்ட் அணிக்கு பும்ரா கேப்டனாக இருக்க வேண்டும் என இந்திய முன்னாள் வீரர் அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார் ,

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பும்ராவை கேப்டனாக நியமிக்க வேண்டும். வேகப்பந்து வீச்சாளராக இருப்பது எளிதல்ல என்பது எனக்குத் தெரியும். அவருக்கு காயங்கள் ஏற்பட்டன. ஆஸ்திரேலிய தொடருக்குப் பிறகு அவர் ஓய்வில் இருந்தார், இந்த ஐபிஎல்லில் மட்டுமே அவர் திரும்பி விளையாடி வருகிறார் . இருப்பினும் பும்ராவை தான் தேர்வு செய்வேன். என தெரிவித்தார் .

Read Entire Article