மும்பை: இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டி கொண்ட டெஸ்ட்டில் ஆட உள்ளது. ரோகித் சர்மா ஓய்வு பெற்று விட்ட நிலையில் புதிய கேப்டனாக சுப்மன் கில் அறிவிக்கப்பட்டுள்ளார். ரிஷப் பன்ட் துணை கேப்டனாக செயல்பட உள்ளார். இந்நிலையில் இந்திய அணியின் பீல்டிங் பயிற்சியாளராக பணியாற்றி வந்த டி. திலீப் மீண்டும் தேசிய அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
அவரின் பணி காலம் ஒரு வருடம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அணியின் பேட்டிங் பயிற்சியாளராக இருந்த அபிஷேக் நாயர் பணி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், டி.திலீப்பின் பணி காலம் ஆஸி.க்கு எதிரான தொடருடன் முடிவுக்கு வந்தது. தற்போது டி.திலீப்பிற்கு மீண்டும் பணி நீட்டிப்பு வழங்கப்பட்டிருக்கிறது.
The post இந்திய கிரிக்கெட் அணியின் பீல்டிங் பயிற்சியாளர் டி.திலீப் பதவி காலம் ஒரு ஆண்டு நீட்டிப்பு appeared first on Dinakaran.