மொடக்குறிச்சி,டிச.28: சிவகிரியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழா துவக்க பேரணி மற்றும் கொடியேற்று விழா, கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு நூறாவது பிறந்த நாள் விழா நடைபெற்றது. முன்னதாக கட்சியின் அலுவலகம் முன்பாக நகர செயலாளர் மணிவண்ணன் கட்சிக் கொடியையும், கைத்தறி நெசவாளர் சங்க மாநில செயலாளர் வரதராஜன் தொழிற்சங்க கொடியையும் ஏற்றி வைத்தனர்.
கட்சியின் ஒன்றிய செயலாளர் ரத்னவேல் பொருளாளர் சண்முகம்,மாதர் சங்க செயலாளர் செல்வி ஆகியோர் நூற்றாண்டு விழா பேரணியை தொடங்கி வைத்தனர். சிவகிரியில் முக்கிய இடங்களில் கொடிகள் ஏற்றி வைக்கப்பட்டது.ஊர்வல நெடுகிலும் பொதுமக்களுக்கு கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை பிரசுரங்கள் வினியோகிக்கப்பட்டது.
The post இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நூற்றாண்டு விழா appeared first on Dinakaran.