இந்திய ஏ அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர்: இங்கிலாந்து அணி அறிவிப்பு

5 hours ago 1

லண்டன்,

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. அதன்படி இவ்விரு அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வருகிற ஜூன் 20-ம் தேதி தொடங்க உள்ளது. 2025-2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் அங்கமாக நடைபெறும் இந்த தொடரில் வெற்றி பெற இரு அணிகளும் கடுமையாக போராடும் என்பதால் இந்த தொடர் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இந்த தொடருக்கு முன்னதாக இந்திய ஏ அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இங்கிலாந்து லயன்சுக்கு எதிராக 2 டெஸ்ட் (4 நாட்கள்) போட்டிகளிலும், இந்திய அணிக்கெதிராக ஒரு போட்டியிலும் விளையாட உள்ளது. இந்த தொடர் மே 30-ம் தேதி தொடங்க உள்ளது. இந்த தொடருக்கான இந்திய ஏ அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது.

இந்நிலையில் இந்த தொடருக்கான இங்கிலாந்து லயன்ஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஜேம்ஸ் ரெவ் தலைமையிலான அந்த அணியில் காயத்திலிருந்து குணமடைந்துள்ள முன்னணி வேகப்பந்து வீச்சாளரான கிறிஸ் வோக்ஸ் இடம்பெற்றுள்ளார்.

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு முன் அவர் உடற்தகுதியை நிரூபிக்கும் பொருட்டு அவருக்கு இடமளிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து லயன்ஸ் அணி விவரம் பின்வருமாறு:- ஜேம்ஸ் ரெவ் (கேப்டன்), பர்ஹான் அகமது, ரெஹான் அகமது, சோனி பேக்கர், ஜோர்டான் காக்ஸ், ராக்கி பிளின்டாப், எமிலியோ கே, டாம் ஹைன்ஸ், ஜார்ஜ் ஹில், ஜோஷ் ஹல், எடி ஜாக், பென் மெக்கின்னி, டான் மவுஸ்லி, அஜீத் சிங் டேல், கிறிஸ் வோக்ஸ்.

Read Entire Article