புதுடெல்லி: தெலங்கானாவின் புகழ்பெற்ற கோல்கொண்டா சுரங்கத்தில் இருந்து வெட்டி எடுக்கப்பட்ட அரிய வைரங்களில் ஒன்றான கோல்கொண்டா நீல வைரம் உலகப் புகழ் பெற்றது. தற்போது இந்த வைரம் முதல் முறையாக ஏலத்தில் விடப்படுகிறது. வரும் மே 14ம் தேதி ஜெனீவாவில் நடக்க உள்ள கிறிஸ்டிஸ் நிறுவனத்தின் மகத்தான நகைகள் ஏலத்தில் 259 ஆண்டு பழமையான பாரம்பரியத்தை கொண்ட இந்த வைரம் விற்பனை செய்யப்பட உள்ளது. 23.24 காரட் எடை கொண்ட இந்த வைரம் பாரிசின் புகழ்பெற்ற நகை வடிவமைப்பாளர் ஜெஏஆர் வடிவமைத்த வெண்ணிற மோதிரத்தில் பொருத்தப்பட்டுள்ளது.
இந்த ஏலத்தில் கோல்கொண்டா வைரஸ் ரூ.300 முதல் ரூ.450 கோடி வரை விலை போகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகின் அரிதான இதுபோன்ற நீல வைரங்கள் ஏலத்திற்கு வருவது வாழ்நாளில் ஒருமுறையாக அமையக் கூடும் என கிறிஸ்டிஸ் நிறுவனத்தின் சர்வதேச நகைத் தலைவர் ராகுல் கடாகியா கூறி உள்ளார். 1920களில் இந்தூரின் மகாராஜா யஷ்வந்த் ராவ் ஹோல்கருக்கு சொந்தமான இந்த வைரத்தை 1947ல் புகழ்பெற்ற நியூயார்க் நகைக்கடை உரிமையாளர் ஹாரி வின்ஸ்டன் வாங்கி பின்னர் பரோடா மகாராஜா கைக்கு மாறி இறுதியில் தனியார் வசம் சென்றடைந்தது.
The post இந்திய அரச பாரம்பரியத்தை கொண்ட அரிய கோல்கொண்டா நீல வைரம் ஏலத்திற்கு வருகிறது: ரூ.430 கோடிக்கு விற்பனையாக வாய்ப்பு appeared first on Dinakaran.