இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பை மீண்டும் உருவாக்குவேன் - ரஜத் படிதார்

4 weeks ago 6

பெங்களூரு,

சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடரின் இறுதிப்போட்டி நாளை நடைபெறுகிறது. இந்த ஆட்டத்தில் மத்திய பிரதேசம் - மும்பை அணிகள் மோத உள்ளன. இந்த ஆட்டம் பெங்களூருவில் நடைபெறுகிறது. மத்திய பிரதேச அணியின் கேப்டனாக ரஜத் படிதார் செயல்பட்டு வருகிறார். இவர் ஐ.பி.எல் தொடரில் பெங்களூரு அணிக்காக ஆடி வருகிறார்.

இந்நிலையில், சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடரின் இறுதிப்போட்டி நாளை நடைபெற உள்ளதை அடுத்து அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, டெஸ்ட் அணியில் விளையாடுவது பிடிக்கும். ஆனால், நான் அந்த வாய்ப்பை இழந்தது சில நேரங்களில் வருத்தமளிக்கிறது. சில நேரங்கள் நாம் நினைத்ததுபோல் நடக்காது. அதனால் பரவாயில்லை. தோல்வியை ஏற்பதுதான் சிறந்த வழி.

கிரிக்கெட்டில் தோல்வி என்பது இருக்கும். அதனால், அதை எதிர்கொண்டு அதில் இருந்து கற்று, முன்னேற வேண்டும். அதுவும் விளையாட்டின் ஒரு பகுதி. ஐ.பி.எல் போட்டிகளில் விளையாடும் அதே பாணியை கையாள்கிறேன். என்னுடைய மந்திரம் ஒரு நேரத்தில் ஒரு பந்து மட்டுமே. எதிரணி மீது தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். பெரிய ரன்கள் அடிக்க முயற்சிப்பதில்லை. இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பை மீண்டும் உருவாக்குவேன்.

ஆர்.சி.பி-க்காக விளையாடுவது பிடிக்கும். என்னை தக்கவைத்தது மிகப்பெரிய தன்னம்பிக்கையை அளித்துள்ளது. ஆர்.சி.பி-யை வழிநடத்த வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் செய்வேன். ஆனால், அது அவர்களின் கைகளில் இருக்கிறது. தலைமைப் பண்பு உத்திகளைக் கற்றுக் கொள்வதில் ஆர்வமாக இருக்கிறேன். அதிகமாக கற்றும் இருக்கிறேன். எனது பயிற்சியாளர் சந்திரகாத் பண்டிட்டிடம் இருந்து கற்று வருகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Read Entire Article