இந்திய அணியில் என்னுடைய முதல் வேலை இதுதான் - மோர்னே மோர்கல்

3 months ago 30

கான்பூர்,

இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமிக்கப்பட்டுள்ளார். பீல்டிங் பயிற்சியாளராக டி திலீப்பும், உதவி பயிற்சியாளர்களாக அபிஷேக் நாயர் மற்றும் ரியான் டென் டோஸ்கேட்டும் செயல்பட்டு வருகின்றனர்.

மேலும் பந்துவீச்சு பயிற்சியாளராக கவுதம் கம்பீரின் பரிந்துரைப்படி மோர்னே மோர்கல் நியமிக்கப்பட்டார். இருப்பினும் அவர் இலங்கை தொடரில் இந்திய அணியுடன் இணையவில்லை.

தற்போது நடைபெற்று வரும் வங்காளதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடரின்போது இந்திய அணியுடன் முதல் முறையாக இணைந்துள்ள மோர்னே மோர்கல் தம்முடைய வேலைகளையும் பயிற்சிகளையும் தொடங்கியுள்ளார்.

இந்நிலையில் இந்திய அணியில் பந்துவீச்சு பயிற்சியாளராக தனது பணி எவ்வாறு இருக்கும் என்பது குறித்து தற்போது அவர் சில கருத்துகளை பகிர்ந்து உள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், "இந்திய அணியின் அமைப்பு தானாகவே சிறப்பாக இயங்கும் ஒன்று. அதை பராமரிப்பதும் அதில் சில சில முன்னேற்றங்களை ஏற்படுத்துவதுமே எங்களுடைய இலக்கு. இந்திய அணியின் தரம் பற்றி நான் சொல்லி தெரிய வேண்டியது இல்லை. தற்போதைய இந்திய அணி மிக பலம் வாய்ந்த அணி. அனுபவ வீரர்கள் நிறைய பேர் இருப்பதினால் தற்போது இந்திய அணி சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறது.

எங்களுடைய முதல் வேலையே வீரர்களுடன் நன்றாக பழகி அவர்களை புரிந்துகொண்டு அவர்களின் பலம், பலவீனத்தை கண்டறிய வேண்டும். அப்படி முழுவதையும் நாங்கள் கண்ட பின்னர் தேவையான விதைகளை விதைப்பதே முக்கியம். தற்போதைக்கு இந்திய அணிக்குள் ஒரு நல்ல சூழலை அமைக்க விரும்புகிறோம். அணிக்குள் ஒற்றுமையும் அமைதியான சூழலும் இருந்தால் சிறந்த செயல்பாடு தானாக வெளிவரும். எனவே தற்போதைக்கு இந்திய அணியை நல்ல சூழலில் வைத்திருக்க விரும்புகிறேன்" என்று கூறினார்.

Read Entire Article