மும்பை: பாகிஸ்தானில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் பாசித் அலி, பங்கேற்று பேசினார். அப்போது இந்திய அணி குறித்து அவர் கூறியதாவது: சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பராக எனது முதல் சாய்ஸ் என்றால் அது ரிஷப் பன்ட் தான். சஞ்சு சாம்சன் இரண்டாவது சாய்ஸாக இருப்பார். எனவே கே.எல்.ராகுல் விக்கெட் கீப்பராக அணியில் இடம்பெறுவது மிகவும் கடினமாக இருக்கும். இதேபோன்று விராட் கோஹ்லியிடம் அதிக உடல் தகுதி இருக்கிறது. ஜெய்ஸ்வால், கில் போன்ற திறமை வாய்ந்த இளைஞர்கள் இருந்தாலும் அவர்கள் யாரும் கோஹ்லி அளவுக்கு டாப் கிளாஸ் வீரர்கள் கிடையாது.
தற்போது இருக்கும் வீரர்களிடம் கோஹ்லி போன்ற அளவு உடல் தகுதி யாருக்கும் கிடையாது. விராட் கோஹ்லி களத்திற்கு புகுந்தால் மற்ற பீல்டர்களை உத்வேகம் செய்வது, பீல்டிங்கிற்காக இடம் மாறுவது என மைதானத்தின் நான்கு பக்கமும் கோஹ்லி இடம் மாறி அசத்திக்கொண்டே இருப்பார். இந்திய அணி பந்துவீச்சை பொறுத்தவரை பும்ரா தான் இருப்பதிலேயே சிறந்த வீரர். சமி, ஆர்ஸ்தீப் சிங், சிராஜ் என மற்ற பவுலர்களும் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் யாரும் பும்ரா அருகில்கூட வரமாட்டார்கள். எனினும் பும்ரா அளவுக்கு செயல்படக்கூடிய ஒரு வீரர் என்றால் அது ஷமிதான். ஆனால் அதற்கு அவர் முழு உடல் தகுதியுடன் இருக்க வேண்டும்’’ என்றார்.
The post இந்திய அணியில் இளசுகள் இருந்தாலும் கோஹ்லி அளவுக்கு டாப் கிளாஸ் யாரும் இல்லை: பாக். மாஜி வீரர் சொல்கிறார் appeared first on Dinakaran.