'இந்தி' அனைத்து இந்திய மொழிகளுக்கும் நண்பன் - அமித்ஷா பேச்சு

1 week ago 3

டெல்லி,

மத்திய அரசின் அலுவல் மொழித் துறையின் பொன்விழா கொண்டாட்டத்தில் உள்துறை மந்திரி அமித்ஷா கலந்துகொண்டு பேசியதாவது;

"அனைத்து மாநில அரசுகளும் உள்ளூர் மொழியில் மருத்துவம் மற்றும் பொறியியல் கல்வியை வழங்க முயற்சி எடுக்க வேண்டும். நிர்வாகப் பணிகளை மேற்கொள்ள இந்திய மொழிகளைப் பயன்படுத்துவதில் அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு உதவும்.

இந்தி எந்த இந்திய மொழியையும் எதிர்க்கவில்லை. மாறாக, அது அனைத்து இந்திய மொழிகளுக்கும் நண்பன். எந்த மொழிக்கும் எதிர்ப்பு இல்லை. எந்த வெளிநாட்டு மொழிக்கும் எதிர்ப்பு இருக்கக்கூடாது. ஆனால் ஒருவரின் சொந்த மொழியைப் போற்றுவதற்கான உந்துதல் இருக்க வேண்டும். ஒருவரின் சொந்த மொழியைப் பேசுவதற்கான உந்துதல் இருக்க வேண்டும், ஒருவரின் சொந்த மொழியில் சிந்திக்கும் உந்துதல் இருக்க வேண்டும்"

இவ்வாறு அவர் பேசினார்.

 

Read Entire Article