இந்த வார விசேஷங்கள்: 25-2-2025 முதல் 3-3-2025 வரை

2 months ago 10

25-ந்தேதி (செவ்வாய்)

* பிரதோஷம்.

* ராமேஸ்வரம் சுவாமி, அம்பாள் மின்விளக்கு அலங்கார வெள்ளி ரதத்தில் பவனி.

* கோயம்புத்தூர் கோணியம்மன் விழா தொடக்கம்.

* திருப்பதி ஏழுமலையான் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல்.

* மேல்நோக்கு நாள்.

26-ந்தேதி (புதன்)

* முகூர்த்த நாள்.

* மகா சிவராத்திரி.

* திருக்கோகர்ணம், காளஹஸ்தி, ஸ்ரீசைலம், திருவைக்காவூர் தலங்களில் சிவபெருமான் ரிஷப வாகனத்தில் பவனி.

* திருவண்ணாமலையில் லிங்கோத்பவர் தரிசனம்,

* ஒப்பிலியப்பன் கோவில் சீனிவாசர் பவனி

* மேல்நோக்கு நாள்.

27-ந்தேதி (வியாழன்)

* அமாவாசை.

* கோயம்புத்தூர் கோணியம்மன் கிளி வாகன சேவை.

* திருவள்ளூர் வீரராகவப் பெருமாள், திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் தலங்களில் தெப்ப உற்சவம்.

* சுவாமிமலை முருகன் தங்க கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.

* மேல்நோக்கு நாள்.

28-ந்தேதி (வெள்ளி)

* சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம்.

* கோவை கோணியம்மன் சிம்ம வாகனத்தில் பவனி

* ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி தங்கப் பல்லக்கில் புறப்பாடு.

* திருத்தணி முருகப்பெருமான் கிளி வாகன சேவை.

* திருக்கோகர்ணம், காளஹஸ்தி, ஸ்ரீசைலம், திருவைக்காவூர் தலங்களில் சிவபெருமான் திருக்கல்யாணம்.

* மேல்நோக்கு நாள்.

1-ந்தேதி (சனி)

* கோயம்புத்தூர் கோணியம்மன் அன்ன வாகனத்தில் பவனி.

* வேதாரண்யம் சிவபெருமான் புறப்பாடு.

* மன்னார்குடி ராஜகோபால சுவாமி, காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள், உப்பிலியப்பன் சீனிவாசப் பெருமாள் தலங்களில் அலங்கார திருமஞ்சனம்.

* திருவல்லிக்கேணி பார்த்தசாரதி, திருவள்ளூர் வீரராகவர் தலங்களில் தெப்ப உற்சவம்

* கீழ்நோக்கு நாள்.

2-ந்தேதி (ஞாயிறு)

* முகூர்த்த நாள்.

* மதுரை கூடலழகர் விழா தொடக்கம்.

* திருப்பதி ஏழுமலையான் மைசூர் மண்டபம் எழுந்தருளல்.

* திருத்தணி முருகன் கோவிலில் பாலாபிஷேகம்

* மேல்நோக்கு நாள்.

3-ந்தேதி (திங்கள்)

* முகூர்த்த நாள்.

* சதுர்த்தி விரதம்.

* திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் மாசிப் பெருவிழா கொடியேற்றம்

* வென்னிமலை சுப்பிரமணியர் கோவிலில் மாசி உற்சவம் ஆரம்பம்.

* மதுரை கூடலழகர் காலை தங்கச் சிவிகையில் மச்ச அவதாரம். இரவு சிம்ம வாகனத்தில் பவனி.

* சமநோக்கு நாள்.

Read Entire Article