இன்றைய ராசிபலன் - 26.05.2025

4 hours ago 2

இன்றைய பஞ்சாங்கம்

மே 26

கிழமை:  திங்கட் கிழமை

தமிழ் வருடம்;  விசுவாவசு

தமிழ் மாதம்;   வைகாசி

நாள்; 12

ஆங்கில தேதி; 26

ஆங்கில மாதம்; மே

வருடம்; 2025

நட்சத்திரம்; இன்று காலை 7-36 வரை பரணி பின்பு கிருத்திகை

திதி; இன்று காலை 11-30 வரை சதுர்த்தசி பின்பு அமாவாசை

யோகம் ;சித்த, மரண யோகம்

நல்ல நேரம்; காலை 6-30 முதல்  07-30

நல்ல நேரம்; மாலை 4-30 முதல்  5-30

ராகு காலம் காலை 07-30 முதல்  09-00

எமகண்டம் காலை 10-30  முதல் 12-00

குளிகை மாலை 1-30 முதல்  3-00

கௌரி நல்ல நேரம் காலை 9-30  முதல் 10-30

கௌரி நல்ல நேரம் மாலை 7-30 முதல் 8-30

சூலம் கிழக்கு

சந்திராஷ்டமம் சித்திரை

இன்றைய ராசிபலன்

மேஷம்

தம்பதிகளிடையே ஒற்றுமை பலப்படும். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். தங்கள் பழைய கடனை தீர்த்துமுடிப்பீர்கள். விற்பனையாளர்களுக்கு விற்பனை கூடும் லாபம் பெருகும். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். அவர்களால் லாபம் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட நிறம் பொன்னிறம்

ரிஷபம்

குடும்பத்தில் நிம்மதி நிலவும். சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். எதிர்பார்த்த ஒன்று கைக்கு கிடைக்கும். வியாபாரத்தில் பணியாட்களின் ஆதரவு கிட்டும். புதிய முயற்சி வெற்றி கொடுக்கும். காதல் கண்சிமிட்டும். பணவரவு அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட நிறம் மஞ்சள்

மிதுனம்

மனைவி வழி உறவினர்கள் தங்களுக்கு உதவுவர். வியாபாரம் செழிக்கும். தம்பதிகளின் திருமணமான புதிதில் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். இன்று நீண்ட தூர பயணங்கள் மேற்கொள்வீர்கள். பிள்ளைகளிடம் அவர்கள் படிப்பு சம்பந்தமாக தங்கள் கருத்துக்களை தெரிவிப்பீர்கள்.

அதிர்ஷ்ட நிறம் வெள்ளை

கடகம்

வெளிநாட்டிற்கு செல்ல விசா கிடைக்கும். குடும்பத்தினரின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். தம்பதிகள் ஒருவொருக்கொருவர் விட்டுக் கொடுப்பர். வாகனம் பழுதாகும். வாகனத்தை சீர் செய்வீர்கள். மார்கெட்டிங் பிரிவினருக்கு வெளி வட்டார தொடர்புகள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட நிறம் ரோஸ்

சிம்மம்

இளைஞர்களுக்கு திருமண முயற்சிகள் தாமதமாகும். தங்கள் அரசாங்க சம்பந்தப்பட்ட சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். எடுக்கும் முயற்சிகள் வெற்றி தரும். சொத்து சம்பந்தப்பட்ட வகையில் நன்மை உண்டு. உடல் நலம் தேறும். நண்பர்கள் ஒன்று சேருவர்.

அதிர்ஷ்ட நிறம் வெள்ளை

கன்னி

வியாபாரிகளிடம் விட்டுக் கொடுத்தல் நல்லது. காதல் கசக்கும். முடிவெடுக்கும் போது சற்று நிதானத்துடன் முடிவெடுப்பது நல்லது. வீட்டு வேலைகளில் தங்கள் துணைவர் பங்கெடுத்துக்கொள்வர். தம்பதிகளிடம் கருத்தொற்றுமை வளரும். தங்கள் கணவரின் வேலைக்காக சிபாரிசுக்கு முற்படுவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம் பச்சை

துலாம்

இன்று சித்திரை நட்சத்திரக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் என்பதால் இறைவனை மட்டும் பிரார்த்திப்பது நல்லது. காரணம் இன்று பல காரியதடைகள் இருப்பதால் புதிய முயற்சிகளை எடுக்காமல் இருப்பது நல்லது. யாரிடமும் வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம் மனக்குழப்பங்கள் ஏற்படும் என்பதால் மிகவும் கவனம் தேவை.

அதிர்ஷ்ட நிறம் மஞ்சள்

விருச்சிகம்

குடும்பத்துடன் வெளியிடங்களுக்கு சென்று வருவீர்கள். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். தேகம் பளிச்சிடும். ஒற்றை தலைவலி நீங்கும். வெளி வட்டாரத்தில் அந்தஸ்து உயரும். நீண்டகால விருப்பங்கள் நிறைவேறும். பிடித்த இடத்திற்கு தங்கள் குடும்பத்துடன் சென்றுவருவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம் வெள்ளை

தனுசு

காதல் வசப்படும். வீடுகட்டும் முயற்சி பலிக்கும். எதிரிகள் இருந்த இடம் காணாமல் போவார்கள். தயங்கிய காரியத்தை இன்று முடித்துகாட்டுவீர்கள். தேகம் பளிச்சிடும். உத்யோகத்தில் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த உங்கள் தேவைகளை மேலதிகாரிகள் பூர்த்திசெய்வர்.

அதிர்ஷ்ட நிறம் நீலம்

மகரம்

வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். குறுகிய தூர பயணம் மேற்கொள்வீர்கள். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்கள் பற்றி உங்களுக்கு புரியவரும். உத்யோகத்தில் வேலைபளு அதிகரிக்கும். கொடுக்கல் வாங்கல் விசயத்தில் கவனம் தேவை.

அதிர்ஷ்ட நிறம் ரோஸ்

கும்பம்

பணப்பற்றாக்குறை நீங்கும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தம் உண்டாகும். கூட்டாளியிடம் கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். வீட்டிற்கு நல்ல வேலையாள் கிடைப்பார்கள். தங்கள் துணை தங்களுக்கு அனுசரனையாக இருப்பார்.

அதிர்ஷ்ட நிறம் ஆரஞ்ச்

மீனம்

வெளியூரிலிருந்து நற்செய்தி கிடைக்கும். நகைக்கடைக்காரர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். தம்பதிகளிடையே ஒற்றுமை கூடும். ஊடகத் துறையினருக்கு மதிப்பு கூடும். உற்சாகம் மிகுந்த நாளாக இருக்கும். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும். உடல் நலம் தேறும்.

அதிர்ஷ்ட நிறம் கிரே


Read Entire Article