இந்த நகரம் முக்கியத்துவம் வாய்ந்தது.. பிரெஞ்சு மண்ணில் சாவர்க்கருக்கு புகழாரம் சூட்டிய மோடி

2 hours ago 1

பாரிஸ்:

பிரான்சில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் மோடி, உள்ளூர் நேரப்படி நேற்று இரவு துறைமுக நகரமான மார்சேய் நகரை வந்தடைந்தார். அப்போது, இந்திய சுதந்திர போராட்ட வீரர் சாவர்க்கரை நினைவுகூர்ந்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டார்.

அதில், "மார்சேய் நகருக்கு வந்துவிட்டேன். இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில், இந்த நகரம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இங்குதான் வீர சாவர்க்கர் துணிச்சலுடன் தப்பிக்க முயன்றார். மார்சேய் நகர மக்களுக்கும், அவரை பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் ஒப்படைக்கக் கூடாது என்று கோரிய அக்கால பிரெஞ்சு ஆர்வலர்களுக்கும் நன்றி தெரிவிக்கிறேன். வீர சாவர்க்கரின் தைரியமானது தலைமுறை தலைமுறையாக ஊக்கம் அளிக்கிறது" என குறிப்பிட்டுள்ளார்.

பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தின்போது, 1910-ம் ஆண்டு ஜூலை 8-ம் தேதி இந்திய சுதந்திர போராட்ட வீரர் சாவர்க்கர், விசாரணைக்காக பிரிட்டிஷ் கப்பலில் கொண்டு செல்லப்பட்டபோது அவர்களின் பிடியில் இருந்து தப்பிக்க முயன்றார்.

அவர் கப்பலில் உள்ள ஜன்னல் வழியாக குதித்து, அங்கிருந்து நீந்தி கரையை அடைந்தபோது பிரெஞ்சு அதிகாரிகள் பிடித்து, பிரிட்டிஷ் கப்பல் அதிகாரிகளிடம் ஒப்படைத்ததாக அறியப்படுகிறது. அதன்பின்னர் இந்தியாவில் வைத்து விசாரணை நடத்தி சாவர்க்கருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Read Entire Article