கழுத்தில் தாலியுடன் பள்ளிக்கு வந்த 9-ஆம் வகுப்பு மாணவி! ஆசிரியர்கள் அதிர்ச்சி

2 hours ago 2

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் 14 வயது சிறுமி. 9-ம் வகுப்பு மாணவியான இவருக்கும் காவேரிப்பட்டணம் பகுதியை சேர்ந்த 25 வயது நபருடன் நேற்று முன்தினம் திருமணம் நடந்தது.

குந்தாரப்பள்ளி அருகே முருகன் கோவிலில் நடந்த இந்த திருமணத்தில் பெற்றோர் கலந்து கொண்டனர். 9-ம் வகுப்பு மாணவிக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் விசேஷம் உள்ளதாகவும், இதற்காக அவைருக்கும் ஆடைகள் வாங்க செல்வதாகவும் கூறி வந்தார். இதை அறிந்து சந்தேகம் அடைந்த ஆசிரியர்கள் இது தொடர்பாக விசாரணை நடத்தினார்கள்.

இந்த நிலையில் இன்று பள்ளிக்கு மாணவி வந்தார். அவரது கழுத்தில் தாலிக்கயிறு இருந்தது. இதை பார்த்த ஆசிரியர்கள் உடனடியாக குழந்தைகள் நல அலுவலகம், சமூக நலத்துறை அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்தனர். இதனைக்கேட்டு ஆசிரியர்கள் சம்பவம் குறித்து கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில், மாணவியின் பெற்றோர், திருமணம் செய்துகொண்ட இளைஞர் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Read Entire Article