
ரோம்,
ரோம் நகரில் நடைபெற்று வரும் இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் நம்பர் 1 வீராங்கனையான அரினா சபலென்கா (பெலாரஸ்), சோபிய கெனின் (அமெரிக்கா) உடன் மோதினார்.
இதில் முதல் செட்டை சோபியா கெனின் கைப்பற்றி சபலென்காவுக்கு அதிர்ச்சி அளித்தார். பின்னர் சுதாரித்து கொண்டு விளையாடிய சபலென்கா அடுத்த 2 செட்டுகளை போராடி கைப்பற்றி வெற்றி பெற்றார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த மோதலில் சபலென்கா 3-6, 6-3 மற்றும் 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று 4-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
இவர் 4-வது சுற்றில் மார்டா கோஸ்ட்யுக் உடன் மோத உள்ளார்.