புதுடெல்லி: கடந்த ஏப்ரல் மாதத்துக்கான ஜிஎஸ்டி வசூல் விவரங்கள் நேற்று வெளியிடப்பட்டன. இதன்படி, கடந்த ஏப்ரல் மாதத்தில் ஜிஎஸ்டி ரூ.2.37 லட்சம் கோடி வசூல் ஆகியுள்ளது. இது முந்தைய ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில் 12.6 சதவீதம் அதிகம். மேலும், ஜிஎஸ்டி அமல்படுத்தியதில் இருந்து இதுவரை வசூல் ஆனதில் அதிகபட்ச வருவாய் இது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ரூ.2.1 லட்சம் கோடி வசூல் ஆனது.
கடந்த மார்ச் மாதத்தில் ரூ.1.96 லட்சம் கோடி வசூல் செய்யப்பட்டது. உள்நாட்டு பரிவர்த்தனை மூலம் ஜிஎஸ்டி வசூல் 10.7 சதவீதம் அதிகரித்து ரூ.1.9 லட்சம் கோடியாகவும், இறக்குமதி பொருட்கள் மீதான ஜிஎஸ்டி ரூ.20.8 சதவீதம் அதிகரித்து ரூ.46,913 கோடியாகவும் உள்ளது. ஜிஎஸ்டியில் ரீபண்டாக ரூ.27,341 கோடி வழங்கப்பட்டுள்ளது என ஒன்றிய அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
The post இதுவரை இல்லாத உச்சம் ஏப்ரல் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.2.37 லட்சம் கோடி appeared first on Dinakaran.