சென்னை: “ஐநா வளர்ச்சி திட்டத்தின் மூலம் தற்போது வெளியிடப்பட்டுள்ள மனித வளர்ச்சி குறியீட்டு அறிக்கை மிகுந்த அதிர்ச்சியை தருகிறது. அதன்படி, இந்தியா தர வரிசை பட்டியலில் 193 நாடுகளில் 134-வது இடத்தில் இருப்பதை இந்தியாவின் மனித வளத்தின் மதிப்பீட்டை ஆய்வு செய்து அம்பலப்படுத்தியிருக்கிறது. எந்த புள்ளி விவரத்தையும் ஏற்றுக் கொள்ள மறுக்கிற பாஜகவினர், ஐநா சபை ஆய்வு செய்து வெளியிட்ட அறிக்கைக்கு என்ன பதில் கூறப் போகிறார்கள்?” என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த 2014, 2019 மக்களவை தேர்தல் பரப்புரைகளின் போது, 2024 ஆம் ஆண்டுக்குள் இந்திய பொருளாதாரத்தை 5 டிரில்லியன் கோடி டாலராக உயர்த்துவதோடு, நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சி விகிதத்தை இரட்டை இலக்கில் உறுதி செய்வோம் என்று பிரதமர் மோடி வாக்குறுதி வழங்கினார். கடந்த 10 ஆண்டுகால பாஜக ஆட்சியில் அவர் கொடுத்த வாக்குறுதியின்படி இந்தியாவில் வளர்ச்சி ஏற்படவில்லை.