
போபால்,
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான புதிய இந்தியா, பயங்கரவாதத்தை பொறுத்துக்கொள்ளாது என்றும், காங்கிரஸ் ஆட்சியின் கீழ் எதிரிகள் நமது ராணுவ வீரர்களின் தலையை துண்டித்த இருண்ட சகாப்தம் முடிவுக்கு வந்துள்ளது என்றும் மத்திய பிரதேச முதல்-மந்திரி மோகன் யாதவ் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது;-
"காலம் மாறிவிட்டது. காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது, எதிரிகள் நம் வீரர்களின் தலையை துண்டித்து வந்தனர். நமது ராணுவம் நடவடிக்கை எடுப்பதற்கு முன்பு அரசாங்கத்திடம் பலமுறை உத்தரவுகளைக் கேட்டது. அந்த இருண்ட சகாப்தம் முடிவுக்கு வந்துவிட்டது.
இது புகழ்பெற்ற பிரதமரான நரேந்திர மோடி காலம். நமது எதிரிகள் இந்தியாவை எதிர்க்க 100 முறை யோசிப்பார்கள். யாராவது நம்மை எதிர்க்க முயன்றால், புதிய இந்தியா அவர்களை தண்டிக்காமல் விடாது."
இவ்வாறு அவர் தெரிவித்தார்.