'இது 56 இன்ச் மார்பு' - பிரதமர் மோடியை பாராட்டிய பாஜக எம்.பி நிஷிகாந்த் துபே

2 hours ago 1

ஸ்ரீநகர், 

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட நிலையில் 1960-ம் ஆண்டு இந்தியா - பாகிஸ்தான் இடையே மேற்கொள்ளப்பட்ட சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை புதன்கிழமை அன்று ரத்து செய்துள்ளது இந்தியா. மத்திய அரசின் இந்த நடவடிக்கையை பாஜக எம்.பி நிஷிகாந்த் துபே பாராட்டி உள்ளார்.

"நோபல் பரிசு பெறுவதற்காக 1960-ல் பாம்புக்கு நீர் கொடுத்தார் நேரு. பிரதமர் மோடி, இன்று அவர்களுக்கான நீர் மற்றும் உணவை நிறுத்தி உள்ளார். பாகிஸ்தானியர்கள் நீரின்றி செத்துமடிவார்கள். இது 56 இன்ச் மார்பு. நாங்கள் பாஜக தொண்டர்கள். அவர்களை சித்திரவதை செய்து கொல்வோம்" என எக்ஸ் பக்கத்தில் நிஷிகாந்த் துபே கூறியுள்ளார். பிரதமர் மோடியின் வலிமையை குறிப்பிடும் விதமாக 56 இன்ச் மார்பு என நிஷிகாந்த் துபே குறிப்பிட்டுள்ளார். 

Read Entire Article