இதய அறுவைச் சிகிச்சை நிபுணர் டாக்டர். செரியன் மறைவுக்கு இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு இரங்கல்..!!

2 weeks ago 3

சென்னை: இதய அறுவைச் சிகிச்சை நிபுணர் டாக்டர். செரியன் மறைவுக்கு இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு இரங்கல் தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், நாட்டின் தலைசிறந்த இதய அறுவைச் சிகிச்சை நிபுணர் டாக்டர் கே.எம்.செரியன் (82) நேற்று முன்தினம் (25.01.2025) இரவு பெங்களூரில் காலமானார் என்ற செய்தி கேட்டு வேதனை அடைந்தோம்.

காலனி ஆட்சி காலத்தில் இருந்த திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் காயங்குளத்தை பூர்வீகமாக கொண்ட டாக்டர் கே.எம்.செரியன், நாட்டில் முதன் முறையாக திறந்த நிலை இருதய அறுவை சிகிச்சை செய்து சாதனை படைத்தவர். அத்துடன் நுரையீரல் மாற்று அறுவைச் சிகிச்சை மற்றும் குழந்தை இதய அறுவை சிகிச்சையில் முன்னோடியாக திகழ்ந்தவர்.

டாக்டர் கே.எம்.செரியன் மருத்துவத்துறையில் 50 ஆண்டுகளுக்கு மேலாக ஆற்றியுள்ள தனிச் சிறப்பான சேவையும், சாதனையும், மருத்துவப் பல்கலைக் கழகங்களிலும், இதய அறுவை சிகிச்சை மருத்துவ மாநாடுகளிலும் ஆற்றிய உரைகளிலும், அவர் மரணத்தை வென்று வாழ்ந்திருப்பார். டாக்டர் கே.எம்.செரியன் வாழ்வும் சேவையும் மருத்துவம் பயிலும் புதிய தலைமுறைக்கு பாடமாக திகழ்ந்திடும்.

நாட்டின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருது உட்பட பல விருதுகளை பெற்ற பெருமைக்குரியவர்.அன்னாரது மறைவுக்கு இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது. அவரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துக் கொள்கிறது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

The post இதய அறுவைச் சிகிச்சை நிபுணர் டாக்டர். செரியன் மறைவுக்கு இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு இரங்கல்..!! appeared first on Dinakaran.

Read Entire Article