இண்டியன்வெல்ஸ் டென்னிஸ்; கோகோ காப் 4-வது சுற்றுக்கு தகுதி

4 hours ago 1

இண்டியன்வெல்ஸ்,

பல முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள இண்டியன்வெல்ஸ் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடந்து வருகிறது.

இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னணி வீராங்கனையான அமெரிக்காவின் கோகோ காப், கிரீசின் மரிய சக்காரி உடன் மோதினார். இதில் 7-6 மற்றும் 6-2 என்ற நேர்செட் கணக்கில் வெற்றி பெற்ற கோகோ காப் 4-வது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.

இவர் 4-வது சுற்றில் பெலிண்டா பென்சிக் உடன் பலப்பரீட்சை நடத்துகிறார்.

Read Entire Article