
இந்தூர்,
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள விமான நிலையத்தில் இருந்து சத்தீஸ்கரின் ராய்ப்பூருக்கு இன்று காலை 6.35 மணிக்கு 51 பயணிகளுடன் இண்டிகோ விமானம்(6E-7295) புறப்பட்டது. விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதாக அலாரம் அடித்துள்ளது.
இதையடுத்து, விமானி உடனடியாக கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்து விமானத்தை மீண்டும் இந்தூர் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கினார். பின்னர் பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். புறப்பட்ட சில நிமிடங்களில் மீண்டும் அதே விமான நிலையத்தில், இண்டிகோ விமானம் தரையிறக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. பயணிகளுக்கு விமானக் கட்டணம் திருப்பி அளிக்கப்படும் என்று இண்டிகோ நிர்வாகம் கூறியுள்ளது.