"இட்லி கடை" அப்டேட் கொடுத்த அருண் விஜய்

4 weeks ago 8

பாங்காக்,

தமிழ் சினிமாவில் இயக்குனராகவும், நடிகராகவும் வலம் வருபவர் தனுஷ். இவரது இயக்கத்தில் 4-வது படமாக 'இட்லி கடை' உருவாகி வருகிறது. தனுஷே இயக்கி நடிக்கும் இத்திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த படத்தினை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இத்திரைப்படத்தில் ராஜ்கிரண், நித்யா மேனன், அருண் விஜய், சத்யராஜ், பார்த்திபன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கப்பட்டு தேனி, பொள்ளாச்சி போன்ற பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இப்படம் ஏப்ரல் மாதம் 10-ந் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. ஆனால் படப்பிடிப்பு பணி நிறைவடையாததால் படத்தின் ரிலீஸ் தேதி மாற்றியமைக்கப்பட்டது. அதன்படி, இட்லி கடை படம் வரும் அக்டோபர் 1ம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்தது.

இந்த நிலையில் இப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதற்காக படக்குழுவினர் பாங்காக் சென்றுள்ளனர். அங்கு அருண் விஜய், சத்யராஜ், பார்த்திபன் ஆகியோர் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை அருண் விஜய் அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

When you are in ur final leg of shoot!!!#IdlyKadai #workoutmotivation #bangkok #Dhanush pic.twitter.com/GjlgVmHU5b

— ArunVijay (@arunvijayno1) April 18, 2025
Read Entire Article