இசையுடன் உணவு திருவிழா துவக்கம்

3 hours ago 2

 

விருதுநகர், ஜன.18: விருதுநகர் மதுரை ரோடு கே.வி.எஸ். பொருட்காட்சி மைதானத்தில் பொங்கல் விடுமுறையை முன்னிட்டு ‘விருந்துடன் விருதுநகர் கார்னிவல் 2025’ என்ற தலைப்பில் இசையுடன் உணவு திருவிழா நேற்று மாலை துவங்கியது. இன்று இரவு 10 மணி வரை உணவு திருவிழா நடைபெறுகிறது. உணவு திருவிழாவில் 60 அரங்குகள் அமைக்கப்பட்டு, அவற்றில் உள்ளூர் துவங்கி சர்வதேச உணவுகள் என வகை, வகையான உணவுகளுடன், பொழுது போக்கு அம்சங்களாக ஆடல், பாடல் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

நேற்று மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை இசை, நடனம் மற்றும் சிவகாசி குழுவினரின் நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இரவு 7 மணி முதல் 10 மணி வரை இசை, கச்சேரி நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 2வது நாளான இன்றும் மாலை 5 முதல் இரவு 7 மணி வரை நடனம், இசை நிகழ்ச்சிகளும் இரவு 7 மணி முதல் 10 மணி இன்னிசைக்குழு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

The post இசையுடன் உணவு திருவிழா துவக்கம் appeared first on Dinakaran.

Read Entire Article