இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய ஏ அணி அறிவிப்பு.. யாருக்கெல்லாம் இடம்..?

7 hours ago 2

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. அதன்படி இவ்விரு அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வருகிற ஜூன் 20-ம் தேதி தொடங்க உள்ளது. 2025-2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் அங்கமாக நடைபெறும் இந்த தொடரில் வெற்றி பெற இரு அணிகளும் கடுமையாக போராடும் என்பதால் இந்த தொடர் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இந்த தொடருக்கு முன்னதாக இந்திய ஏ அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இங்கிலாந்து லயன்சுக்கு எதிராக 2 டெஸ்ட் (4 நாட்கள்) போட்டிகளிலும், இந்திய அணிக்கெதிராக ஒரு போட்டியிலும் விளையாட உள்ளது. இந்த தொடர் மே 30-ம் தேதி தொடங்க உள்ளது.

இந்நிலையில் இந்த தொடருக்கான இந்திய ஏ அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அபிமன்யு ஈஸ்வரன் தலைமையிலான அந்த அணியில் ஜெய்ஸ்வால், கருண் நாயர், நிதிஷ் ரெட்டி, ருதுராஜ் கெய்க்வாட் ஆகிய முன்னணி வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

இந்திய ஏ அணி விவரம் பின்வருமாறு:- அபிமன்யு ஈஸ்வரன் (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், கருண் நாயர், துருவ் ஜூரல், நிதிஷ் குமார் ரெட்டி, ஷர்துல் தாகூர், இஷான் கிஷன், மானவ் சுதர், தனுஷ் கோட்டியான், முகேஷ் குமார், ஆகாஷ் தீப், ஹர்ஷித் ராணா, அன்ஷுல் கம்போஜ், ருதுராஜ் கெய்க்வாட், சர்பராஸ் கான், துஷார் தேஷ்பாண்டே, ஹர்ஷ் துபே.

சுப்மன் கில் மற்றும் சாய் சுதர்சன் இருவரும் 2-வது போட்டியின்போது அணியுடன் இணைவர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


Read Entire Article