
நாக்பூர்,
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை 1-4 (5 போட்டிகள்) என்ற கணக்கில் இழந்த இங்கிலாந்து, அடுத்ததாக 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடுகிறது.
இதன்படி இந்தியா- இங்கிலாந்து இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி மராட்டிய மாநிலம் நாக்பூரில் இன்று நடைபெற்று வருகிறது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது.
இந்த போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் விராட் கோலி இடம்பெறவில்லை. இதற்கான காரணம் குறித்து இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில், மூட்டு வலி காரணமாக விராட் கோலி இன்றைய ஆட்டத்தில் களமிறங்கவில்லை என விளக்கமளித்துள்ளார்.