இங்கிலாந்து-பாகிஸ்தான் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி இன்று தொடக்கம்

3 months ago 23

முல்தான்,

பாகிஸ்தானுக்கு சென்றுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முல்தானில் நடந்த தொடக்க டெஸ்டில் இங்கிலாந்து 823 ரன்கள் குவித்து பிரமிக்க வைத்ததுடன் இன்னிங்ஸ் வெற்றி பெற்றது. இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி அதே முல்தானில் இன்று காலை 10.30 மணிக்கு தொடங்குகிறது. அதுவும் முதல் டெஸ்டுக்குரிய அதே ஆடுகளமே இந்த டெஸ்டுக்கும் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

தசைப்பிடிப்பால் கடந்த டெஸ்டில் ஆடாத இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் அணிக்கு திரும்புகிறார். வேகப்பந்து வீச்சாளர் மேத்யூ போட்ஸ் ஆடும் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளார். கிறிஸ் வோக்ஸ், அட்கின்சனுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. 'பாஸ்பால்' என்ற அதிரடியான பேட்டிங் யுக்தியால் இந்த டெஸ்டிலும் பாகிஸ்தானை மிரட்ட இங்கிலாந்து ஆயத்தமாகியுள்ளது.

பாகிஸ்தான் அணியில் மோசமான பார்ம் காரணமாக முன்னாள் கேப்டன் பாபர் அசாம், வேகப்பந்து வீச்சாளர்கள் ஷகீன் ஷா அப்ரிடி, நசீம் ஷா கழற்றி விடப்பட்டுள்ளனர். அறிமுக பேட்ஸ்மேனாக கம்ரன் குலாம் கால்பதிக்கிறார். சுழல்ஜாலம் எடுபடலாம் என்று கருதப்படுவதால் நமன் அலி, ஜாகித் மக்மூத், சஜித் கான் ஆகிய மூன்று சுழற்பந்து வீச்சாளர்களுடன் பாகிஸ்தான் களம் காணுகிறது.  

 

Read Entire Article