இங்கிலாந்தில் வெறும் 33 சராசரியை கொண்ட அவரை இந்தியா மிஸ் செய்யாது - மைக்கேல் வாகன் கிண்டல்

2 weeks ago 3

லண்டன்,

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்தியா முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

இந்த தொடருக்கு இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா, நட்சத்திர வீரர் விராட் கோலி ஆகியோர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஒரு வார இடைவெளியில் அடுத்தடுத்து ஓய்வு பெற்றனர். விரைவில் இந்த டெஸ்ட் தொடர் தொடங்க இருந்த நிலையில் இவர்களின் விலகல் இந்திய கிரிக்கெட் அரங்கை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

முன்னதாக பார்டர் - கவாஸ்கர் கோப்பை மற்றும் நியூசிலாந்து தொடர்களில் விராட் மற்றும் ரோகித் சொதப்பியதால் அவர்களை அணியிலிருந்து நீக்க தேர்வுக்குழு மற்றும் தலைமை பயிற்சியாளர் கம்பீர் முடிவெடுத்ததாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அதற்கு முன்னதாக இருவரும் தாங்களாகவே ஓய்வை அறிவித்து விட்டனர்.

இவர்களில் விராட் கோலியை இந்திய அணி அதிகம் தவறவிடும் என்று பலர் கூறினர். ஏனெனில் களத்தில் ஆக்ரோஷம் மற்றும் பேட்டிங்கில் அசத்திய அவர் இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திர வீரர்களில் ஒருவராக போற்றப்பட்டார். அவர் இல்லாமல் இந்திய அணி இங்கிலாந்தில் வெற்றி பெறுவது கடினம் என்று பல முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்தனர்.

இந்நிலையில் இங்கிலாந்தில் வெறும் 33 என்ற சராசரியை மட்டுமே கொண்டுள்ள விராட் கோலியை இந்திய அணி மிஸ் செய்யாது என்று அந்நாட்டின் முன்னாள் வீரரான மைக்கேல் வாகன் கிண்டலடித்துள்ளார்.

இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "இந்திய அணியை சுற்றி கலாச்சாரத்தை உருவாக்கிய விராட் கோலி ஒரு ஜாம்பவான். ஒரு கேப்டனாக அவர் அணிக்குள் கொண்டு வந்த ஆற்றல், உந்துதல் மற்றும் ஆக்ரோஷம் இன்னும் உள்ளது. ஆனால் இங்கிலாந்தில் அவர் சராசரியாக 33 ரன்கள் மட்டுமே எடுத்தார். சராசரியாக 33 ரன்கள் எடுக்கும் ஒருவரை நீங்கள் பெரிதாக தவற விட மாட்டீர்கள்;

ஆனால் ஓய்வறையில் இவ்வளவு கொண்டு வந்த ஒருவரை நீங்கள் மிஸ் செய்வீர்கள். தற்போது இந்தியாவுக்காக விளையாட வந்துள்ள இந்த வீரர்கள் உண்மையிலேயே திறமையானவர்கள்தான். ஒருவேளை இந்த புதிய தலைமுறை வீரர்கள் காத்திருந்திருக்கலாம். அவர்கள் சிறப்பாக விளையாடினால் ஆச்சரியப்பட வேண்டாம்" என்று கூறினார்.

Read Entire Article