![](https://media.dailythanthi.com/h-upload/2025/02/11/38942607-untitled-2.webp)
லண்டன்,
அமெரிக்காவில் சட்ட விரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டினர் நாடு கடத்தப்பட்டு வருகிறார்கள். சமீபத்தில் 104 இந்தியர்கள் ராணுவ விமானத்தில் திருப்பி அனுப்பப்பட்டனர்.இந்த நிலையில் அமெரிக் காவை போல இங்கிலாந்தில் சட்டவிரோதமாக தங்கி உள்ள அகதிகளை கண்டு பிடிக்கும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டு வருகி றார்கள். இதில் சட்ட விரோதமாக தங்கியுள்ள வர்கள் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்படுகிறார்கள்.இந்த நிலையில் இங்கி லாந்தில் உள்ள இந்திய ஓட்டல்களில் போலீசார் அதிரடி சோதனை நடத்தி னர். இந்தியர்கள் நடத்தும் உணவகங்கள், பார்கள் மற்றும் வணிக வளாகங்க ளில் சோதனை நடத்தப் பட்டது. அங்குள்ள இந்தி யர்களின் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டன.
ஹம்பர்சைட் பகுதியில் உள்ள இந்திய உணவகத்தில் நடந்த சோதனையில் 7 இந்தியர்கள் கைது செய்யப் பட்டனர்.இது தொடர்பாக உள் துறை செயலாளர் யுவெட்டே கூப்பர் கூறும் போது, கடந்த ஜனவரி மாதம் 828 இடங்களில் சோதனை நடத்தப்பட்டு 609 பேர் கைது செய்யப்பட்டனர். உணவகங்கள், கபேக்கள், புகையிலை தொழிற்சாலை உள்ள இடங்களில்தான் சட்ட விரோதமாக தங்கி உள்ளவர்களின் செயல்பாடு கள் அதிகமாக உள்ளது.
கடந்த ஆண்டு ஜூலை முதல், இந்தாண்டு ஜனவரி இறுதி வரை சட்டவிரோத மாக குடியேறியவர்களுக்கு எதிரான சோதனைகள் அதிகரித்துள்ளது என்றார்.இந்த நிலையில் சுமார் 19 ஆயிரம் வெளிநாட்டு குற்ற வாளிகள் மற்றும் சட்ட விரோதமாக குடியேறிய வர்கள் நாடு கடத்தப்படும் வீடியோவை இங்கிலாந்து அரசு முதன் முறையாக வெளியிட்டு உள்ளது.