
ஜமைக்கா,
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் முறையே ஹெட்டிங்லே (லீட்ஸ்), பர்மிங்காம் (எட்ஜ்பாஸ்டன்) ஆகிய இடங்களில் நடைபெற்றது. இந்த இரண்டு மைதானங்களில் உள்ள ஆடுகளம் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமான வகையில் அமைக்கப்பட்டிருந்தது.
பொதுவாக இங்கிலாந்து ஆடுகளங்கள் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும். ஆனால், ஆசிய கண்டத்தில் உள்ள ஆடுகளம் போன்று இருப்பதாக விமர்சனம் செய்யப்பட்டது. இந்த நிலையில் முதல் இரண்டு போட்டிகளுக்கான ஆடுகளங்கள் முற்றிலும் நெடுஞ்சாலை போன்று இருந்தது.
இதில் சுப்மன் கில்லிற்கு பந்து வீசமாட்டேன் என ஆஸ்திரேலியாவின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மிட்செல் ஸ்டார்க் கூறியதாவது, இங்கிலாந்தில் நான் சுப்மன் கில்லுக்கு பந்து வீச மாட்டேன். இது உறுதி. இந்தியா- இங்கிலாந்து போட்டியை அதிக அளவில் பார்க்கவில்லை.
ஸ்கோர் போர்டு பார்த்தேன். லபுசேன், அலேக்ஸ் கேரி, ஸ்மித் போன்றோர் காலையில் எழுந்து (வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ஆஸ்திரேலியா விளையாடியது), காபி மெஷின் அருகே அமர்ந்து போட்டியை பார்த்தனர். நான் ஸ்கோர் மட்டும் பார்த்தேன். இங்கிலாந்தில் இதுபோன்ற ஆடுகளத்தில் யார் பந்து வீச விரும்புவார்கள்? இவ்வாறு மிட்செல் ஸ்டார்க் தெரிவித்தார்.