
துபாய்,
9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடந்து வருகிறது. இதில் துபாயில் நேற்று நடைபெற்ற முதலாவது அரையிறுதியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 264 ரன்கள் எடுத்தது.
ஆஸ்திரேலியா தரப்பில் அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் 73 ரன் எடுத்தார். இந்தியா தரப்பில் முகமது ஷமி 3 விக்கெட் வீழ்த்தினார். தொடர்ந்து 265 ரன் என்ற இலக்கை நோக்கி களம் புகுந்த இந்தியா 48.1 ஓவரில் 6 விக்கெட்டை மட்டும் இழந்து 267 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
முன்னதாக ஐ.சி.சி. தொடர்களில் ஒவ்வொரு போட்டியிலும் பீல்டிங் துறையில் சிறந்து விளங்கும் இந்திய வீரருக்கு பி.சி.சி.ஐ. 'இம்பேக்ட் பீல்டர் விருது' வழங்கி கவுரவித்து வருகிறது. அதன்படி நியூசிலாந்துக்கு எதிரான இந்த ஆட்டத்தின் சிறந்த பீல்டராக ஸ்ரேயாஸ் ஐயர் தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு இந்த விருதை இந்திய முன்னாள் வீரரும், பயிற்சியாளருமான ரவி சாஸ்திரி வழங்கினார்.
