
கேன்பரா,
ஆஸ்திரேலியாவில் மொத்தம் 150 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் 76 தொகுதிகளை கைப்பற்றும் கட்சி ஆட்சியமைக்கும். அந்த வகையில் ஆஸ்திரேலிய நாடாளுமன்ற தேர்தல் இன்று நடைபெற்றது.
இதில், ஆஸ்திரேலியாவின் ஆளும் கட்சியான தொழிலாளர் கட்சியும், கன்சர்வேடிவ் கட்சியும் நேரடியாக போட்டியிட்டன. பிரதமர் அந்தோணி அல்பனீஸ் தலைமையில் தொழிலாளர் கட்சி களமிறங்கியது. எதிக்கட்சி தலைவர் பீட்டர் டட்டன் தலைமையில் கன்சர்வேடிவ் கட்சி களமிறங்கியது. தேர்தலில் பரபரப்பாக வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில் வாக்குகள் இன்றே எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், ஆஸ்திரேலியா நாடாளுமன்ற தேர்தலில் ஆளும் தொழிலாளர் கட்சி அதிக இடங்களை கைப்பற்றியுள்ளது. இதன் மூலம் அந்தோணி அல்பனீஸ் மீண்டும் ஆஸ்திரேலியா பிரதமர் ஆகிறார். அவர் 2வது முறையாக ஆஸ்திரேலிய பிரதம் ஆகிறார். பிரதமராக அல்பனீஸ் பதவியேற்கும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.