
பெர்த்,
இந்திய பெண்கள் ஆக்கி அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 ஆட்டங்கள் கொண்ட தொடரில் பங்கேற்றது. இதில் இந்திய அணி முதலில் ஆஸ்திரேலியா 'ஏ' அணிக்கு எதிரான 2 ஆட்டங்களிலும் தோல்வியை தழுவியது. இதைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய சீனியர் அணிக்கு எதிராக 3 ஆட்டங்களில் விளையாடியது. இதிலும் இந்திய அணி இரு ஆட்டங்களில் தோற்றது.
இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஆட்டம் பெர்த்தில் நேற்று நடந்தது. இதில் இந்தியா 1-0 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி ஆறுதல் வெற்றி பெற்றது. இந்திய துணை கேப்டன் நவ்னீத் கவுர் 21-வது நிமிடத்தில் கோல் அடித்தார். இந்தியாவுக்கு இந்த தொடர் 4 தோல்வி, ஒரு வெற்றியுடன் முடிவுக்கு வந்திருக்கிறது.