மெல்போர்ன்,
ஆண்டின் முதல் 'கிராண்ட்ஸ்லாம்' போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டம் ஒன்றில் முன்னணி வீராங்கனைகளான மேடிசன் கீஸ் (அமெரிக்கா) - ரைபகினா (கஜகஸ்தான்) பலப்பரீட்சை நடத்தினர்.
சமபலம் வாய்ந்த இரு வீராங்கனைகளும் மல்லுக்கட்டியதால் ஆட்டத்தில் அனல் பறந்தது. இதில் முதல் செட்டை கீஸ் கைப்பற்றிய நிலையில், 2-வது செட்டை ரைபகினா கைப்பற்றினார். இதனால் 3-வது செட் பரபரப்புக்குள்ளானது. அந்த செட்டை கீஸ் கைப்பற்றி பரபரப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தார். இந்த ஆட்டத்தில் மேடிசன் கீஸ் 6-3, 1-6 மற்றும் 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார்.
கீஸ் காலிறுதியில் ஸ்விடோலினா உடன் மோத உள்ளார்.