ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் வீரராக ஸ்வரெவ் அரையிறுதிக்கு தகுதி

3 hours ago 1

மெல்போர்ன்,

இறுதி கட்டத்தை எட்டியுள்ள ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் தற்போது காலிறுதி ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதலாவது காலிறுதி ஆட்டத்தில் அலெக்சாண்டர் ஸ்வரெவ் (ஜெர்மனி), டாமி பாலுடன் (அமெரிக்கா) மோதினார்.

இதில் முதல் 2 செட்டுகளை ஸ்வரெவ் கைப்பற்றிய நிலையில், 3-அது செட்டை டாமி பால் கைப்பற்றினார். இதனையடுத்து நடைபெற்ற 4-வது செட்டை ஸ்வரெவ் கைப்பற்றி முதல் வீரராக அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். இந்த ஆட்டத்தில் ஸ்வரெவ் 7-6, 7-6, 2-6 மற்றும் 6-1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

Read Entire Article