மெல்போர்ன்,
ஆண்டின் முதல் 'கிராண்ட்ஸ்லாம்' போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 4வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னணி வீரர்களான ஜன்னிக் சின்னெர் (இத்தாலி) - ஹோல்கர் ரூனே (டென்மார்க்) ஆகியோர் மோதினர்.
இந்த ஆட்டத்தின் முதல் செட்டை 6-3 என்ற புள்ளிக்கணக்கில் ஜன்னிக் சின்னெரும், 2வது செட்டை 6-3 என்ற புள்ளிக்கணக்கில் ஹோல்கர் ரூனேவும் கைப்பற்றினர். இதையடுத்து நடைபெற்ற 3வது மற்றும் 4வது செட்டை 6-3, 6-2 என்ற புள்ளிக்கணக்கில் ஜன்னிக் சின்னெர் கைப்பற்றினார்.
இதன் மூலம் 6-3, 3-6, 6-3, 6-2 என்ற செட் கணக்கில் ஹோல்கர் ரூனேவை வீழ்த்தி ஜன்னிக் சின்னெர் வெற்றி பெற்றார். இந்த வெற்றியின் மூலம் ஜன்னிக் சின்னெர் காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.