![](https://media.dailythanthi.com/h-upload/2025/01/25/35792607-zvsin.webp)
மெல்போர்ன்,
'கிராண்ட்ஸ்லாம்' போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்ன் நகரில் நடந்து வருகிறது. விறுவிறுப்பான இந்த போட்டி இறுதி கட்டத்தை எட்டி விட்டது. கடந்த 6-ம் தேதி தொடங்கிய இந்த தொடர் இன்றுடன் நிறைவடைய உள்ளது.
இதில் இன்று நடைபெறும் ஆண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியனும், நம்பர் ஒன் வீரருமான இத்தாலியின் ஜானிக் சினெர், 2-ம் நிலை வீரரான ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவுடன் பலப்பரீட்சை நடத்துகிறார்.
இதில் வெற்றி பெற்று ஆண்டின் முதல் 'கிராண்ட்ஸ்லாம்' சாம்பியன் பட்டத்தை கைப்பற்றுவது யார்? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.