ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்; கலப்பு இரட்டையர் பிரிவில் காலிறுதியில் தோல்வி கண்ட போபண்ணா ஜோடி

4 hours ago 1

மெல்போர்ன்,

'கிராண்ட்ஸ்லாம்' போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள இந்த தொடரின் கலப்பு இரட்டையர் பிரிவில் இன்று நடைபெற்ற காலிறுதி ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் ரோகன் போபண்ணா - சீனாவின் சூவாய் ஜாங் ஜோடி, ஆஸ்திரேலியாவின் ஜான் பியர்ஸ் - ஒலிவியா காடெக்கி ஜோடியுடன் மோதியது.

இந்த போட்டியின் முதல் செட்டை 6-2 என்ற புள்ளிக்கணக்கில் கைப்பற்றிய போபண்ணா ஜோடி, அடுத்த இரு செட்களை 4-6, 9-11 என்ற புள்ளிக்கணக்கில் இழந்தது. இறுதியில் இந்த ஆட்டத்தில் 2-6, 6-4, 11-9 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்ற ஜான் பியர்ஸ் - ஒலிவியா காடெக்கி ஜோடி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறி அசத்தியது.

Read Entire Article