சென்னை: ஆஸ்திரேலிய துணைத் தூதரகம் சார்பில், சென்னை எலியட்ஸ் கடற்கரையில் (பெசன்ட் நகர்) தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டது.
ஆஸ்திரேலிய துணைத் தூதரகம், கிளீன்அப் ஆஸ்திரேலியா இயக்கம் மற்றும் அர்பேசர் சுமீத் இணைந்து சென்னை, பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையை தூய்மைப்படுத்தும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை செயலர் சுப்ரியா சாஹூ மற்றும் சென்னைக்கான ஆஸ்திரேலிய துணைத் தூதர் சிலாய் சாக்கி ஆகியோர் பங்கேற்று, கடற்கரை தூய்மைப் பணியை தொடங்கிவைத்தனர்.